குர்ஆன் 2:213 — பசுங்கன்று
நற்செய்திகளுடனும், அதே சமயம் எச்சரிக்கை செய்பவர்களாகவும் வேதம்வழங்கப்பட்டவர் களைக் கடவுள் அனுப்பிய போது மக்கள் ஒரே சமூகமாகவே இருந்தனர். மக்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் தீர்ப்பு அளிப் பதற்காக, அவர் அவர்களுடன் உண்மையைக் கொண்ட வேதத்தை இறக்கி அனுப்பி வைத் தார். எதிர்மறையாக, எவர்கள் வேதத்தைப் பெற்றார்களோ, அவர்களுக்கு தெளிவான சான்றுகள் கொடுக்கப்பட்ட போதிலும், புதிய வேதத்தை ஏற்க மறுத்தனர். இதற்கு அவர் களிடமிருந்த பொறாமையே காரணம். கடவுள் அவருடைய நாட்டத்திற்கு இணங்க, மற்றவர்கள் அனைவராலும் மறுக்கப்படுகின்ற சத்தியத்தின் பால் நம்பிக்கை கொண்டோரை வழி நடத்து கின்றார். எவர் நேர்வழியை * நாடுகின்றாரோ அவரைக் கடவுள் வழிநடத்துகின்றார்.
[2:212] இந்த உலக வாழ்வு நம்ப மறுப்பவர்களின் கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றார்கள். எப்படியிருப்பினும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளில் நன்னெறியாளர்கள், அவர்களை விட மிகவும் மேலாக இருப்பார்கள். கடவுள் தான் நாடியவர்களுக்கு அளவின்றி அருள்புரிகின்றார்.
[2:214] உங்களுக்கு முன்னிருந்தோர் சோதிக்கப் பட்டது போல் சோதிக்கப்படாமல் சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அவர்கள் துன்பத்தைக்கொண்டும், இன்னல்களைக் கொண்டும் சோதிக்கப்பட்டார்கள். மேலும் தூதரும், அவருடன் நம்பிக்கைகொண்டோரும் “கடவுள்-ன் வெற்றி எங்கே”? என்று கூறும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். கடவுள்-ன் வெற்றி அருகிலேயே உள்ளது.