குர்ஆன் 2:212 — பசுங்கன்று
இந்த உலக வாழ்வு நம்ப மறுப்பவர்களின் கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றார்கள். எப்படியிருப்பினும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளில் நன்னெறியாளர்கள், அவர்களை விட மிகவும் மேலாக இருப்பார்கள். கடவுள் தான் நாடியவர்களுக்கு அளவின்றி அருள்புரிகின்றார்.
[2:211] நாம் எத்தனை ஆழ்ந்த அற்புதங்களை காட்டினோம் என்று இஸ்ரவேலின் சந்ததியினரைக் கேட்பீராக! ஏனெனில் தங்கள் மீது கடவுள் வழங்கிய அருட்கொடைகளை அலட்சியம் செய்தவர்களுக்கு தண்டனை அளிப்பதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.
[2:213] நற்செய்திகளுடனும், அதே சமயம் எச்சரிக்கை செய்பவர்களாகவும் வேதம்வழங்கப்பட்டவர் களைக் கடவுள் அனுப்பிய போது மக்கள் ஒரே சமூகமாகவே இருந்தனர். மக்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் தீர்ப்பு அளிப் பதற்காக, அவர் அவர்களுடன் உண்மையைக் கொண்ட வேதத்தை இறக்கி அனுப்பி வைத் தார். எதிர்மறையாக, எவர்கள் வேதத்தைப் பெற்றார்களோ, அவர்களுக்கு தெளிவான சான்றுகள் கொடுக்கப்பட்ட போதிலும், புதிய வேதத்தை ஏற்க மறுத்தனர். இதற்கு அவர் களிடமிருந்த பொறாமையே காரணம். கடவுள் அவருடைய நாட்டத்திற்கு இணங்க, மற்றவர்கள் அனைவராலும் மறுக்கப்படுகின்ற சத்தியத்தின் பால் நம்பிக்கை கொண்டோரை வழி நடத்து கின்றார். எவர் நேர்வழியை * நாடுகின்றாரோ அவரைக் கடவுள் வழிநடத்துகின்றார்.