Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:211 — பசுங்கன்று

நாம் எத்தனை ஆழ்ந்த அற்புதங்களை காட்டினோம் என்று இஸ்ரவேலின் சந்ததியினரைக் கேட்பீராக! ஏனெனில் தங்கள் மீது கடவுள் வழங்கிய அருட்கொடைகளை அலட்சியம் செய்தவர்களுக்கு தண்டனை அளிப்பதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.

[2:210] அடர்ந்த மேகங்களுக்குள் இருந்து வானவர் கள் புடை சூழ கடவுள் வரும் வரை அவர்கள் காத்திருக்கின்றார்களா? இது நிகழும் போது சகல காரியமும் முடிந்திருக்கும். மேலும் அனைத்தும் கடவுள்-இடம் திரும்பக் கொண்டு வரப்படும்.*

[2:212] இந்த உலக வாழ்வு நம்ப மறுப்பவர்களின் கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றார்கள். எப்படியிருப்பினும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளில் நன்னெறியாளர்கள், அவர்களை விட மிகவும் மேலாக இருப்பார்கள். கடவுள் தான் நாடியவர்களுக்கு அளவின்றி அருள்புரிகின்றார்.