குர்ஆன் 2:240 — பசுங்கன்று
எவர்கள் தங்கள் மனைவியரை விட்டு விட்டு இறந்து விடுகின்றனரோ அவர்களுடைய மனைவியர் அதே வீட்டில் ஓராண்டு காலம் தங்கியிருக்க தேவையான பொருட்கள், அவர் களுக்கு கிடைக்கும் படியாக மரணசாசனம் அவர்களுக்கு தரப்படவேண்டும். அவர்கள் வெளியேறினால், நன்னெறியில் நிலைத் திருக்கக்கூடிய நிலையில் அவர்கள் விரும்பியதை செய்து கொள்ள விடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[2:239] அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நீங்கள் நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோ தொழுது கொள்ளலாம். நீங்கள் பாதுகாப்பை அடைந்தவுடன் நீங்கள் ஒரு போதும் அறிந்திராதவற்றை அவர் உங்களுக்கு கற்றுத்தந்துள்ளபடி கடவுள்-ஐ நீங்கள் நினைவு கூர வேண்டும்.
[2:241] விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கு நியாய மான வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும். நன்னெறியாளர்கள் மீது இது ஒரு கடமை யாகும்.