குர்ஆன் 2:241 — பசுங்கன்று
விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கு நியாய மான வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும். நன்னெறியாளர்கள் மீது இது ஒரு கடமை யாகும்.
[2:240] எவர்கள் தங்கள் மனைவியரை விட்டு விட்டு இறந்து விடுகின்றனரோ அவர்களுடைய மனைவியர் அதே வீட்டில் ஓராண்டு காலம் தங்கியிருக்க தேவையான பொருட்கள், அவர் களுக்கு கிடைக்கும் படியாக மரணசாசனம் அவர்களுக்கு தரப்படவேண்டும். அவர்கள் வெளியேறினால், நன்னெறியில் நிலைத் திருக்கக்கூடிய நிலையில் அவர்கள் விரும்பியதை செய்து கொள்ள விடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[2:242] நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு தன்னு டைய வெளிப்பாடுகளை கடவுள் இவ்விதமாக விளக்குகின்றார்.