குர்ஆன் 2:255 — பசுங்கன்று
கடவுள்: அவரைத் தவிர வேறெந்த தெய்வமும் இல்லை, அவர் என்றென்றும் ஜீவித்திருப்பவர், நிரந்தரமானவர். ஒரு நொடி கவனமின்மையோ, அல்லது சிறு தூக்கமோ அவரைப் பீடிக்காது. வானங்களில் உள்ள அனைத்தும் மேலும் பூமியில் உள்ள அனைத்தும் அவருக்கே உரியது. அவருடைய விருப்பத்திற்கு இணங்கவே அல்லாமல் யார் அவரிடம் பரிந்துரை செய்ய இயலும்? அவர் களுடைய கடந்த காலத்தையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர் அறிவார். அவர் நாடியவாறே அல்லாமல் எவர் ஒருவரும் எந்த அறிவையும் பெறுவதில்லை. அவருடைய அரசாட்சி வானங்களையும், பூமியையும் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் அவற்றை ஆள்வது அவருக்கு ஒரு போதும் சுமையாக இருப்பதில்லை. அவர்தான் மிகவும் உயர்ந்தவர், மகத்தானவர்.
[2:254] நம்பிக்கை கொண்டோரே, எந்தக் கொடுக்கல் வாங்கலும், உறவுமுறை சலுகைகளும், பரிந் துரையும் இல்லாத அந்த நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் இருந்து நீங்கள் தர்மம் கொடுக்க வேண்டும். நம்ப மறுப்பவர்கள் தான் அநியாயக்காரர்கள்.
[2:256] மார்க்கத்தில் நிர்பந்தம் இருக்கக்கூடாது: சரியான பாதை, தவறான பாதையை விட்டும் முற்றிலும் பிரிக்கப்பட்டுவிட்டது. எவர் ஒருவர் சாத்தானுக்கு எதிராகப் பேசி, மேலும் கடவுள்-ன் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் ஒரு உறுதியான பிடிமானத்தை பிடித்துக் கொண்டார்; அது ஒரு போதும் உடைவதில்லை. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.