குர்ஆன் 2:254 — பசுங்கன்று
நம்பிக்கை கொண்டோரே, எந்தக் கொடுக்கல் வாங்கலும், உறவுமுறை சலுகைகளும், பரிந் துரையும் இல்லாத அந்த நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் இருந்து நீங்கள் தர்மம் கொடுக்க வேண்டும். நம்ப மறுப்பவர்கள் தான் அநியாயக்காரர்கள்.
[2:253] இத்தூதர்கள்; இவர்களில் சிலருக்கு மற்றவர் களைவிட நாம் அதிகமாக அருள்புரிந்தோம். உதாரணமாக கடவுள் ஒருவரிடம் பேசினார், மேலும் அவர்களில் சிலரை உயர்ந்த பதவி களுக்கு நாம் உயர்த்தினோம் மேலும் மேரியின் மகன் இயேசுவிற்கு ஆழ்ந்த அற்புதங்களையும் மேலும் பரிசுத்த ஆவியை கொண்டு ஆதரவும் அளித்தோம். கடவுள் நாடி இருந்தால் அவர்களைப் பின்பற்றியவர்கள், தெளிவான சான்றுகள் தங்களிடம் வந்த பின்னர் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டார்கள், அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டனர். மேலும் சிலர் நம்ப மறுத்தனர். கடவுள் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். அனைத்தும் கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே இருக்கின்றது.
[2:255] கடவுள்: அவரைத் தவிர வேறெந்த தெய்வமும் இல்லை, அவர் என்றென்றும் ஜீவித்திருப்பவர், நிரந்தரமானவர். ஒரு நொடி கவனமின்மையோ, அல்லது சிறு தூக்கமோ அவரைப் பீடிக்காது. வானங்களில் உள்ள அனைத்தும் மேலும் பூமியில் உள்ள அனைத்தும் அவருக்கே உரியது. அவருடைய விருப்பத்திற்கு இணங்கவே அல்லாமல் யார் அவரிடம் பரிந்துரை செய்ய இயலும்? அவர் களுடைய கடந்த காலத்தையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர் அறிவார். அவர் நாடியவாறே அல்லாமல் எவர் ஒருவரும் எந்த அறிவையும் பெறுவதில்லை. அவருடைய அரசாட்சி வானங்களையும், பூமியையும் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் அவற்றை ஆள்வது அவருக்கு ஒரு போதும் சுமையாக இருப்பதில்லை. அவர்தான் மிகவும் உயர்ந்தவர், மகத்தானவர்.