Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:284 — பசுங்கன்று

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. உங்கள் ஆழ் மனதின் எண்ணங்களை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அவற்றை மறைத்தாலும் அவற்றிற்கு கடவுள் உங்களை பொறுப்பாளி ஆக்குவார். அவர் தான் நாடுகின்றவரை மன்னிக்கின்றார். மேலும் தான் நாடுகின்றவரை தண்டிக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[2:283] நீங்கள் பிரயாணத்தில் இருந்து மேலும் எழுதுபவர் கிடைக்கவில்லை என்றால் திருப்பித் தருவதற்கு உத்தரவாதமாக ஒரு உறுதிப்பத்திரம் அனுப்பப் பட வேண்டும். இவ்விதமாக ஒருவர் நம்பப்பட்டால் கெடு முடியும் போது அவர் அந்த உறுதிப் பத்திரத்தை திருப்பி தந்துவிட வேண்டும். மேலும் அவர் அவருடைய இரட்சகராகிய கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் சாட்சியளித்ததை மறைத்து எந்த ஒரு அத்தாட்சி யையும் நிறுத்தி வைத்துக் கொள்ளாதீர்கள். எவர் ஒருவர் ஒரு அத்தாட்சியை நிறுத்தி வைத்துக் கொள்கின்றாரோ அவர் மனதளவில் பாவியாக உள்ளார். நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[2:285] தூதர் அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு என்ன இறக்கப்பட்டதோ அதை நம்புகின்றார், மேலும் நம்பிக்கை கொண்டோரும் அவ்வாறே செய்கின்றார்கள். அவர்கள் கடவுள்-ஐ, அவருடைய வானவர்களை, அவருடைய வேதத்தை, மேலும் அவருடைய தூதர்களை நம்புகின்றார்கள்; “நாங்கள் அவருடைய எந்த தூதர்களுக்கிடையிலும் வேற்றுமை பாராட்டுவ தில்லை.” அவர்கள், “நாங்கள் செவியேற்றோம் மேலும் கீழ்ப்படிந்தோம்.* எங்களுடைய இரட்சகரே, எங்களை மன்னிப்பீராக, இறுதிவிதி உம்மிடமே இருக்கின்றது”, என்று கூறுகின்றார்கள்.