Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:286 — பசுங்கன்று

கடவுள் எந்த ஒரு ஆன்மாவிற்கும் அதன் சக்தி க்கு மீறிய சுமைகளை ஒரு போதும் சுமத்துவ தில்லை: அது என்ன சம்பாதிக்கின்றதோ அது அதற்கு வரவாகும். மேலும் அது என்ன செய்கின்ற தோ அது அதற்கு எதிராகும். “எங்கள் இரட்சகரே, நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறு செய்து விட்டாலோ, எங்களைத் தண்டித்து விடாதீர். எங்கள் இரட்சகரே, மேலும் எங்களுக்கு முன்னிருந்தோர் செய்தது போல் உமக்கெதிராக நிந்தனை செய்வதை விட்டும் எங்களை பாதுகாப் பீராக. எங்கள் இரட்சகரே, வருந்தித்திருந்துவதற்கு மிகவும் காலதாமதம் ஆகிவிடும் வரையிலும் பாவம் செய்து கொண்டிருப்பதை விட்டும் எங்களைப் பாதுகாப்பீராக. எங்களைப் பிழை பொறுப்பீராக மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே எங்களுடைய இரட்சகரும் எஜமானருமாவீர், நம்பிக்கையற்ற மக்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியை தருவீராக”.

[2:285] தூதர் அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு என்ன இறக்கப்பட்டதோ அதை நம்புகின்றார், மேலும் நம்பிக்கை கொண்டோரும் அவ்வாறே செய்கின்றார்கள். அவர்கள் கடவுள்-ஐ, அவருடைய வானவர்களை, அவருடைய வேதத்தை, மேலும் அவருடைய தூதர்களை நம்புகின்றார்கள்; “நாங்கள் அவருடைய எந்த தூதர்களுக்கிடையிலும் வேற்றுமை பாராட்டுவ தில்லை.” அவர்கள், “நாங்கள் செவியேற்றோம் மேலும் கீழ்ப்படிந்தோம்.* எங்களுடைய இரட்சகரே, எங்களை மன்னிப்பீராக, இறுதிவிதி உம்மிடமே இருக்கின்றது”, என்று கூறுகின்றார்கள்.