குர்ஆன் 2:41 — பசுங்கன்று
உங்களிடம் உள்ளதை உறுதிப்படுத்திய வண்ணம், இதிலே நான் வெளிப்படுத்தி யிருப்பவற்றில் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், இதனை நிராகரிப்போரில் முதன்மையானவர்களாக ஆகி விடாதீர்கள். என் வெளிப்பாடுகளை மலிவான விலைக்கு வியாபாரம் செய்துவிடாதீர்கள். மேலும் என்னை கவனத்தில் கொள்ளுங்கள்.
[2:40] இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்குச் செய்த உதவிகளை நினைவில் கொள்ளுங்கள், மேலும் உடன்படிக்கையின் எனது பங்கை நான் பூர்த்தி செய்யும் பொருட்டு, உடன்படிக்கையின் உங்கள் பங்கை பூர்த்தி செய்யுங்கள், மேலும் என்னிடம் பயபக்தியோடிருங்கள்.
[2:42] சத்தியத்துடன் அசத்தியத்தைச் சேர்த்துக் குழப்பிவிடாதீர்கள், அன்றி அறிந்து கொண்டே நீங்கள் சத்தியத்தை மறைக்கவும் செய்யாதீர்கள்.