குர்ஆன் 2:53 — பசுங்கன்று
நீங்கள் வழிகாட்டப்படும் பொருட்டு, மோஸஸிற்கு நாம் வேதத்தையும், சட்டப் புத்தகத்தையும் வழங்கியதை நினைவு கூருங்கள்.
[2:52] அவ்வாறிருந்தும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அதன்பின்னர் உங்களை நாம் மன்னித்தோம்.
[2:54] மோஸஸ், தன் சமூகத்தாரிடம், “என் சமூகத்தாரே, கன்றுக்குட்டியை வழிபட்டதன் மூலம் நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டீர்கள், நீங்கள் உங்கள் படைப்பாளரிடம் வருந்தித்திருந்தியாக வேண்டும், உங்கள் அகந்தைகளை நீங்கள் கொல்ல வேண்டும். உங்கள் படைப்பாளரின் பார்வை யில் இது உங்களுக்கு சிறந்ததாகும்”என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர் உங்களை மீட்டுக் கொண்டார், அவர்தான் மீட்பவர், மிக்க கருணையாளர்.