குர்ஆன் 2:55 — பசுங்கன்று
நீங்கள், “மோஸஸே, கடவுள்-ஐ, நாங்கள் கண் கூடாகக் காணும்வரை நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அதன் விளைவாக நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே மின்னல் உங்களைத் தாக்கியது.
[2:54] மோஸஸ், தன் சமூகத்தாரிடம், “என் சமூகத்தாரே, கன்றுக்குட்டியை வழிபட்டதன் மூலம் நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டீர்கள், நீங்கள் உங்கள் படைப்பாளரிடம் வருந்தித்திருந்தியாக வேண்டும், உங்கள் அகந்தைகளை நீங்கள் கொல்ல வேண்டும். உங்கள் படைப்பாளரின் பார்வை யில் இது உங்களுக்கு சிறந்ததாகும்”என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர் உங்களை மீட்டுக் கொண்டார், அவர்தான் மீட்பவர், மிக்க கருணையாளர்.
[2:56] நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு, நீங்கள் மரணித்துவிட்ட பின்னர், உங்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தோம்.