குர்ஆன் 2:58 — பசுங்கன்று
நாம், “இந்நகரத்திற்குள் நுழையுங்கள், அதில் நீங்கள் விரும்பியவாறு ஏராளமான வாழ்வாதாரங்களை நீங்கள் காண்பீர்கள். அப்படியே அடக்கத்துடன் நுழைவாயிலுக்குள் நுழையுங்கள், மேலும் மனிதர்களை நல்ல முறையில் நடத்துங்கள், பின்னர் நாம் உங்களது பாவங்களை மன்னிப்போம், மேலும் பக்தியுடையோரின் வெகுமதியை அதிகரிப் போம்” என்று கூறியதை நினைவு கூருங்கள்.
[2:57] (சினாயில்) நாம் மேகங்களைக் கொண்டு உங்களுக்கு நிழல் தந்தோம், மேலும் உங்களுக்கு மன்னாவையும், காடைகளையும் இறக்கி அனுப்பினோம், “ நாம் உங்களுக்கு வழங்கிய நல்ல பொருட்களில் இருந்து உண்ணுங்கள்” (கலகத்தின் மூலம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை; அவர்கள் தங்கள் சொந்த ஆன்மாக்களுக்குத்தான் தீங் கிழைத்துக் கொள்கின்றனர்.
[2:59] ஆனால் அவர்களில் இருந்த தீயவர்கள் அவர் களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்கு மாறான கட்டளைகளைச் செயல்படுத்தினர். அதன் விளைவாக, வரம்பு மீறியவர்களின் மீது அவர்களுடைய தீமைகளுக்காக விண்ணி லிருந்து தண்டனையை நாம் இறக்கி அனுப்பி னோம்.