Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:59 — பசுங்கன்று

ஆனால் அவர்களில் இருந்த தீயவர்கள் அவர் களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்கு மாறான கட்டளைகளைச் செயல்படுத்தினர். அதன் விளைவாக, வரம்பு மீறியவர்களின் மீது அவர்களுடைய தீமைகளுக்காக விண்ணி லிருந்து தண்டனையை நாம் இறக்கி அனுப்பி னோம்.

[2:58] நாம், “இந்நகரத்திற்குள் நுழையுங்கள், அதில் நீங்கள் விரும்பியவாறு ஏராளமான வாழ்வாதாரங்களை நீங்கள் காண்பீர்கள். அப்படியே அடக்கத்துடன் நுழைவாயிலுக்குள் நுழையுங்கள், மேலும் மனிதர்களை நல்ல முறையில் நடத்துங்கள், பின்னர் நாம் உங்களது பாவங்களை மன்னிப்போம், மேலும் பக்தியுடையோரின் வெகுமதியை அதிகரிப் போம்” என்று கூறியதை நினைவு கூருங்கள்.

[2:60] மோஸஸ் தன் சமூகத்தாருக்கு தண்ணீரைத் தேடியதை நினைவு கூருங்கள். நாம், “உமது கைத்தடியால் பாறையை அடியும்” என்று கூறினோம். அப்போது அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி எழுந்தன. ஒவ்வொரு குலத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்குரிய தண்ணீரை அறிந்திருந்தனர். கடவுள்-ன் வாழ்வாதாரங்களில் இருந்து உண்ணுங்கள், பருகுங்கள், மேலும் சீர்குலைப்பவர்களாக பூமியைச் சுற்றித் திரியாதீர்கள்.