Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:60 — பசுங்கன்று

மோஸஸ் தன் சமூகத்தாருக்கு தண்ணீரைத் தேடியதை நினைவு கூருங்கள். நாம், “உமது கைத்தடியால் பாறையை அடியும்” என்று கூறினோம். அப்போது அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி எழுந்தன. ஒவ்வொரு குலத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்குரிய தண்ணீரை அறிந்திருந்தனர். கடவுள்-ன் வாழ்வாதாரங்களில் இருந்து உண்ணுங்கள், பருகுங்கள், மேலும் சீர்குலைப்பவர்களாக பூமியைச் சுற்றித் திரியாதீர்கள்.

[2:59] ஆனால் அவர்களில் இருந்த தீயவர்கள் அவர் களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்கு மாறான கட்டளைகளைச் செயல்படுத்தினர். அதன் விளைவாக, வரம்பு மீறியவர்களின் மீது அவர்களுடைய தீமைகளுக்காக விண்ணி லிருந்து தண்டனையை நாம் இறக்கி அனுப்பி னோம்.

[2:61] நீங்கள், “மோஸஸே, ஒரே வகை உணவை எங்களால் இனியும் சகித்துக் கொள்ள இயலாது. உமது இரட்சகரிடம் அவரைக்காய், வெள்ளரி, பூண்டு, தட்டைப்பயிறு, மற்றும் வெங்காயம் போன்ற பூமியின் பயிர்களை எங்களுக்காக விளைவிக்குமாறு பிரார்த்தனை செய்யும்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர், “நல்லவற்றிற்குப் பகரமாக தாழ்ந்தவற்றை மாற்றிக் கொள்ள விரும்புகின்றீர்களா? எகிப்திற்கு இறங்கிச் செல்லுங்கள் அங்கே நீங்கள் கேட்டவற்றை காண்பீர்கள்,” என்று கூறினார். அவர்கள் தண்டனைக்கும், இழிவிற்கும் அவமானத்திற்கும் உள்ளானார்கள், மேலும் தங்கள் மீதே கடவுள்-ன் கோபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை மறுத்துக் கொண்டும், வேதம் வழங்கப்பட்டவர்களை அநீதமாக கொலை செய்து கொண்டும் இருந்தததே இதற்கு காரணம் ஆகும். இது ஏனெனில், அவர்கள் கீழ்படிய மறுத்ததாலும், வரம்புமீறிக் கொண்டு இருந்ததனாலுமாகும்.