குர்ஆன் 2:61 — பசுங்கன்று
وَإِذ قُلتُم يٰموسىٰ لَن نَصبِرَ عَلىٰ طَعامٍ وٰحِدٍ فَادعُ لَنا رَبَّكَ يُخرِج لَنا مِمّا تُنبِتُ الأَرضُ مِن بَقلِها وَقِثّائِها وَفومِها وَعَدَسِها وَبَصَلِها ۖ قالَ أَتَستَبدِلونَ الَّذى هُوَ أَدنىٰ بِالَّذى هُوَ خَيرٌ ۚ اهبِطوا مِصرًا فَإِنَّ لَكُم ما سَأَلتُم ۗ وَضُرِبَت عَلَيهِمُ الذِّلَّةُ وَالمَسكَنَةُ وَباءو بِغَضَبٍ مِنَ اللَّهِ ۗ ذٰلِكَ بِأَنَّهُم كانوا يَكفُرونَ بِـٔايٰتِ اللَّهِ وَيَقتُلونَ النَّبِيّۦنَ بِغَيرِ الحَقِّ ۗ ذٰلِكَ بِما عَصَوا وَكانوا يَعتَدونَ
நீங்கள், “மோஸஸே, ஒரே வகை உணவை எங்களால் இனியும் சகித்துக் கொள்ள இயலாது. உமது இரட்சகரிடம் அவரைக்காய், வெள்ளரி, பூண்டு, தட்டைப்பயிறு, மற்றும் வெங்காயம் போன்ற பூமியின் பயிர்களை எங்களுக்காக விளைவிக்குமாறு பிரார்த்தனை செய்யும்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர், “நல்லவற்றிற்குப் பகரமாக தாழ்ந்தவற்றை மாற்றிக் கொள்ள விரும்புகின்றீர்களா? எகிப்திற்கு இறங்கிச் செல்லுங்கள் அங்கே நீங்கள் கேட்டவற்றை காண்பீர்கள்,” என்று கூறினார். அவர்கள் தண்டனைக்கும், இழிவிற்கும் அவமானத்திற்கும் உள்ளானார்கள், மேலும் தங்கள் மீதே கடவுள்-ன் கோபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை மறுத்துக் கொண்டும், வேதம் வழங்கப்பட்டவர்களை அநீதமாக கொலை செய்து கொண்டும் இருந்தததே இதற்கு காரணம் ஆகும். இது ஏனெனில், அவர்கள் கீழ்படிய மறுத்ததாலும், வரம்புமீறிக் கொண்டு இருந்ததனாலுமாகும்.
[2:60] மோஸஸ் தன் சமூகத்தாருக்கு தண்ணீரைத் தேடியதை நினைவு கூருங்கள். நாம், “உமது கைத்தடியால் பாறையை அடியும்” என்று கூறினோம். அப்போது அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி எழுந்தன. ஒவ்வொரு குலத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்குரிய தண்ணீரை அறிந்திருந்தனர். கடவுள்-ன் வாழ்வாதாரங்களில் இருந்து உண்ணுங்கள், பருகுங்கள், மேலும் சீர்குலைப்பவர்களாக பூமியைச் சுற்றித் திரியாதீர்கள்.
[2:62] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டோரும், யூதர்களாக இருப்போரும், கிறிஸ்தவர்களும், மேலும் மாறியவர்களும், எவர் ஒருவர் (1) கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (2) இறுதி நாளின் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ அவர்கள் தங்கள் வெகுமதியை தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.