குர்ஆன் 2:62 — பசுங்கன்று
நிச்சயமாக, நம்பிக்கை கொண்டோரும், யூதர்களாக இருப்போரும், கிறிஸ்தவர்களும், மேலும் மாறியவர்களும், எவர் ஒருவர் (1) கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (2) இறுதி நாளின் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ அவர்கள் தங்கள் வெகுமதியை தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
[2:61] நீங்கள், “மோஸஸே, ஒரே வகை உணவை எங்களால் இனியும் சகித்துக் கொள்ள இயலாது. உமது இரட்சகரிடம் அவரைக்காய், வெள்ளரி, பூண்டு, தட்டைப்பயிறு, மற்றும் வெங்காயம் போன்ற பூமியின் பயிர்களை எங்களுக்காக விளைவிக்குமாறு பிரார்த்தனை செய்யும்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர், “நல்லவற்றிற்குப் பகரமாக தாழ்ந்தவற்றை மாற்றிக் கொள்ள விரும்புகின்றீர்களா? எகிப்திற்கு இறங்கிச் செல்லுங்கள் அங்கே நீங்கள் கேட்டவற்றை காண்பீர்கள்,” என்று கூறினார். அவர்கள் தண்டனைக்கும், இழிவிற்கும் அவமானத்திற்கும் உள்ளானார்கள், மேலும் தங்கள் மீதே கடவுள்-ன் கோபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை மறுத்துக் கொண்டும், வேதம் வழங்கப்பட்டவர்களை அநீதமாக கொலை செய்து கொண்டும் இருந்தததே இதற்கு காரணம் ஆகும். இது ஏனெனில், அவர்கள் கீழ்படிய மறுத்ததாலும், வரம்புமீறிக் கொண்டு இருந்ததனாலுமாகும்.
[2:63] “நாம் உங்களுக்குக் கொடுத்திருப்பதை நீங்கள் திடமாக ஆதரிக்கவேண்டும், மேலும் நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு அதில் உள்ளவற்றை நினைவில் கொள்ள வேண்டும்” என்று சினாய் மலையை உங்களுக்கு மேலாய் உயர்த்தியவாறு நாம் உங்களிடம் ஒரு உடன்படிக்கை செய்தோம்.