குர்ஆன் 2:63 — பசுங்கன்று
“நாம் உங்களுக்குக் கொடுத்திருப்பதை நீங்கள் திடமாக ஆதரிக்கவேண்டும், மேலும் நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு அதில் உள்ளவற்றை நினைவில் கொள்ள வேண்டும்” என்று சினாய் மலையை உங்களுக்கு மேலாய் உயர்த்தியவாறு நாம் உங்களிடம் ஒரு உடன்படிக்கை செய்தோம்.
[2:62] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டோரும், யூதர்களாக இருப்போரும், கிறிஸ்தவர்களும், மேலும் மாறியவர்களும், எவர் ஒருவர் (1) கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (2) இறுதி நாளின் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ அவர்கள் தங்கள் வெகுமதியை தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
[2:64] ஆனால் அதன் பின்னரும் நீங்கள் திரும்பிச் சென்றுவிட்டீர்கள். கடவுள்-ன் அருளும், கருணையும் மட்டும் உங்கள் மீது இல்லா திருந்தால் நீங்கள் அழிக்கப்பட்டிருப்பீர்கள்.