Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:81 — பசுங்கன்று

உண்மையில், எவர்கள் பாவத்தைச் சம்பாதித்து, மேலும் தங்கள் தீய காரியங்களினால் சூழப்படு கின்றார்களோ, அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள்; அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.

[2:80] குறைவான எண்ணிக்கையிலான நாட்களே தவிர, நரகம் எங்களைத் தீண்டாது என்று சிலர் கூறிஉள்ளனர். “அத்தகையதொரு வாக் குறுதியைக் கடவுள்-இடமிருந்து பெற்றிருக் கின்றீர்களா - கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதியை முறிக்கமாட்டார் - அல்லது கடவுள்-ஐ பற்றி நீங்கள் அறியாதவற்றைக் கூறுகின்றீர்களா?” என்று கூறுவீராக.

[2:82] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள்; அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.