குர்ஆன் 2:82 — பசுங்கன்று
நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள்; அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
[2:81] உண்மையில், எவர்கள் பாவத்தைச் சம்பாதித்து, மேலும் தங்கள் தீய காரியங்களினால் சூழப்படு கின்றார்களோ, அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள்; அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
[2:83] இஸ்ரவேலின் சந்ததியினரிடம் நாம்: “கடவுள் -ஐ தவிர எவரையும் நீங்கள் வழிபடக்கூடாது , உங்களுடைய பெற்றோரை கண்ணியப்படுத்த வேண்டும். உங்கள் உறவினர்களை, அநாதை களை, மற்றும் ஏழைகளை மதிக்க வேண்டும். மக்களை நீங்கள் இணக்கத்துடன் நடத்த வேண்டும். நீங்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வரவும் வேண்டும்”, என்று ஓர் உடன்படிக்கை செய் தோம். ஆனால், உங்களில் சிலரைத் தவிர, நீங்கள் திரும்பி விட்டீர்கள், மேலும் வெறுப் புற்றவர்களாக ஆகிவிட்டீர்கள்.