Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:83 — பசுங்கன்று

இஸ்ரவேலின் சந்ததியினரிடம் நாம்: “கடவுள் -ஐ தவிர எவரையும் நீங்கள் வழிபடக்கூடாது , உங்களுடைய பெற்றோரை கண்ணியப்படுத்த வேண்டும். உங்கள் உறவினர்களை, அநாதை களை, மற்றும் ஏழைகளை மதிக்க வேண்டும். மக்களை நீங்கள் இணக்கத்துடன் நடத்த வேண்டும். நீங்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வரவும் வேண்டும்”, என்று ஓர் உடன்படிக்கை செய் தோம். ஆனால், உங்களில் சிலரைத் தவிர, நீங்கள் திரும்பி விட்டீர்கள், மேலும் வெறுப் புற்றவர்களாக ஆகிவிட்டீர்கள்.

[2:82] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள்; அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.

[2:84] நீங்கள் உங்கள் இரத்தத்தைச் சிந்தவோ, உங்களில் ஒருவரை ஒருவர் உங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றவோ கூடாதென்று உங்களி டம் நாம் ஓர் உடன்படிக்கை செய்தோம். நீங்கள் ஏற்றுக்கொண்டு சாட்சியம் அளித்தீர்கள்.