குர்ஆன் 2:84 — பசுங்கன்று
நீங்கள் உங்கள் இரத்தத்தைச் சிந்தவோ, உங்களில் ஒருவரை ஒருவர் உங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றவோ கூடாதென்று உங்களி டம் நாம் ஓர் உடன்படிக்கை செய்தோம். நீங்கள் ஏற்றுக்கொண்டு சாட்சியம் அளித்தீர்கள்.
[2:83] இஸ்ரவேலின் சந்ததியினரிடம் நாம்: “கடவுள் -ஐ தவிர எவரையும் நீங்கள் வழிபடக்கூடாது , உங்களுடைய பெற்றோரை கண்ணியப்படுத்த வேண்டும். உங்கள் உறவினர்களை, அநாதை களை, மற்றும் ஏழைகளை மதிக்க வேண்டும். மக்களை நீங்கள் இணக்கத்துடன் நடத்த வேண்டும். நீங்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வரவும் வேண்டும்”, என்று ஓர் உடன்படிக்கை செய் தோம். ஆனால், உங்களில் சிலரைத் தவிர, நீங்கள் திரும்பி விட்டீர்கள், மேலும் வெறுப் புற்றவர்களாக ஆகிவிட்டீர்கள்.
[2:85] இருப்பினும், இங்கே நீங்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றீர்கள், மேலும் உங்களில் சிலரை பாவகரமாகவும் கெட்ட எண்ணத் தோடும் அவர்களுக்கெதிராக ஒன்றுசேர்ந்து கொண்டு, அவர்களுடைய வீடுகளைவிட்டும் வெளியேற்றுகின்றீர்கள். அவர்கள் சரணடைந் தாலும் அவர்களிடம் ஈட்டுத்தொகை கேட்கின் றீர்கள். முதலில் அவர்களை வெளியேற்றுவதே உங்களுக்குத் தடுக்கப்பட்டதாக இருந்தது. நீங்கள் வேதத்தின், ஒரு பகுதியை நம்பி ஒரு பகுதியை நம்ப மறுக்கின்றீர்களா? உங்களில் இதனைச் செய்வோருக்கு இவ்வுலகில் இழிவும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் மிக மோசமான தண்டனையும் தவிர வேறென்ன தண்டனை இருக்க இயலும்? நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் கடவுள் ஒருபோதும் அறியாதவர் அல்ல.