குர்ஆன் 2:85 — பசுங்கன்று
ثُمَّ أَنتُم هٰؤُلاءِ تَقتُلونَ أَنفُسَكُم وَتُخرِجونَ فَريقًا مِنكُم مِن دِيٰرِهِم تَظٰهَرونَ عَلَيهِم بِالإِثمِ وَالعُدوٰنِ وَإِن يَأتوكُم أُسٰرىٰ تُفٰدوهُم وَهُوَ مُحَرَّمٌ عَلَيكُم إِخراجُهُم ۚ أَفَتُؤمِنونَ بِبَعضِ الكِتٰبِ وَتَكفُرونَ بِبَعضٍ ۚ فَما جَزاءُ مَن يَفعَلُ ذٰلِكَ مِنكُم إِلّا خِزىٌ فِى الحَيوٰةِ الدُّنيا ۖ وَيَومَ القِيٰمَةِ يُرَدّونَ إِلىٰ أَشَدِّ العَذابِ ۗ وَمَا اللَّهُ بِغٰفِلٍ عَمّا تَعمَلونَ
இருப்பினும், இங்கே நீங்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றீர்கள், மேலும் உங்களில் சிலரை பாவகரமாகவும் கெட்ட எண்ணத் தோடும் அவர்களுக்கெதிராக ஒன்றுசேர்ந்து கொண்டு, அவர்களுடைய வீடுகளைவிட்டும் வெளியேற்றுகின்றீர்கள். அவர்கள் சரணடைந் தாலும் அவர்களிடம் ஈட்டுத்தொகை கேட்கின் றீர்கள். முதலில் அவர்களை வெளியேற்றுவதே உங்களுக்குத் தடுக்கப்பட்டதாக இருந்தது. நீங்கள் வேதத்தின், ஒரு பகுதியை நம்பி ஒரு பகுதியை நம்ப மறுக்கின்றீர்களா? உங்களில் இதனைச் செய்வோருக்கு இவ்வுலகில் இழிவும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் மிக மோசமான தண்டனையும் தவிர வேறென்ன தண்டனை இருக்க இயலும்? நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் கடவுள் ஒருபோதும் அறியாதவர் அல்ல.
[2:84] நீங்கள் உங்கள் இரத்தத்தைச் சிந்தவோ, உங்களில் ஒருவரை ஒருவர் உங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றவோ கூடாதென்று உங்களி டம் நாம் ஓர் உடன்படிக்கை செய்தோம். நீங்கள் ஏற்றுக்கொண்டு சாட்சியம் அளித்தீர்கள்.
[2:86] இவர்கள்தான் மறுவுலகை செலவு செய்து, கீழான இந்த வாழ்வை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். அதன் விளைவாக, தண்டனை அவர்களுக்கு ஒரு போதும் குறைக்கப்படாது, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.