Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:86 — பசுங்கன்று

இவர்கள்தான் மறுவுலகை செலவு செய்து, கீழான இந்த வாழ்வை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். அதன் விளைவாக, தண்டனை அவர்களுக்கு ஒரு போதும் குறைக்கப்படாது, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

[2:85] இருப்பினும், இங்கே நீங்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றீர்கள், மேலும் உங்களில் சிலரை பாவகரமாகவும் கெட்ட எண்ணத் தோடும் அவர்களுக்கெதிராக ஒன்றுசேர்ந்து கொண்டு, அவர்களுடைய வீடுகளைவிட்டும் வெளியேற்றுகின்றீர்கள். அவர்கள் சரணடைந் தாலும் அவர்களிடம் ஈட்டுத்தொகை கேட்கின் றீர்கள். முதலில் அவர்களை வெளியேற்றுவதே உங்களுக்குத் தடுக்கப்பட்டதாக இருந்தது. நீங்கள் வேதத்தின், ஒரு பகுதியை நம்பி ஒரு பகுதியை நம்ப மறுக்கின்றீர்களா? உங்களில் இதனைச் செய்வோருக்கு இவ்வுலகில் இழிவும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் மிக மோசமான தண்டனையும் தவிர வேறென்ன தண்டனை இருக்க இயலும்? நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் கடவுள் ஒருபோதும் அறியாதவர் அல்ல.

[2:87] மோஸஸிற்கு நாம் வேதத்தை வழங்கினோம், மேலும் அவரைத் தொடர்ந்து மற்றத் தூதர் களை நாம் அனுப்பினோம், மேலும் மேரியின் மகனாகிய இயேசுவிற்கு ஆழ்ந்த அற்புதங்களை வழங்கினோம், மேலும் பரிசுத்த ஆவியைக் கொண்டு அவருக்கு ஆதரவளித் தோம். ஒவ்வொரு முறையும் நீங்கள் விரும்பாத எதையேனும் தூதர்கள் கொண்டு வரும் போது நீங்கள் ஆணவம் கொண்டவர்களாக ஆக உங்கள் அகந்தை காரணமானது என்பது உண்மை இல்லையா? அவர்களில் சிலரை நீங்கள் ஏற்க மறுத்தீர்கள், மேலும் அவர்களில் சிலரை நீங்கள் கொன்று விட்டீர்கள்.