குர்ஆன் 2:87 — பசுங்கன்று
மோஸஸிற்கு நாம் வேதத்தை வழங்கினோம், மேலும் அவரைத் தொடர்ந்து மற்றத் தூதர் களை நாம் அனுப்பினோம், மேலும் மேரியின் மகனாகிய இயேசுவிற்கு ஆழ்ந்த அற்புதங்களை வழங்கினோம், மேலும் பரிசுத்த ஆவியைக் கொண்டு அவருக்கு ஆதரவளித் தோம். ஒவ்வொரு முறையும் நீங்கள் விரும்பாத எதையேனும் தூதர்கள் கொண்டு வரும் போது நீங்கள் ஆணவம் கொண்டவர்களாக ஆக உங்கள் அகந்தை காரணமானது என்பது உண்மை இல்லையா? அவர்களில் சிலரை நீங்கள் ஏற்க மறுத்தீர்கள், மேலும் அவர்களில் சிலரை நீங்கள் கொன்று விட்டீர்கள்.
[2:86] இவர்கள்தான் மறுவுலகை செலவு செய்து, கீழான இந்த வாழ்வை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். அதன் விளைவாக, தண்டனை அவர்களுக்கு ஒரு போதும் குறைக்கப்படாது, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
[2:88] சிலர், “எங்கள் மனங்கள் முடிவெடுத்து விட்டன” என்று கூறுவார்கள், அவ்வாறல்ல, இது அவர்களுடைய நம்பிக்கையின்மையின் விளை வாக கடவுள்-இடம் இருந்து வந்த சாபம் ஆகும். இது அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்களை நம்பிக்கை கொள்வதை விட்டும் தடுக்கின்றது.