குர்ஆன் 2:88 — பசுங்கன்று
சிலர், “எங்கள் மனங்கள் முடிவெடுத்து விட்டன” என்று கூறுவார்கள், அவ்வாறல்ல, இது அவர்களுடைய நம்பிக்கையின்மையின் விளை வாக கடவுள்-இடம் இருந்து வந்த சாபம் ஆகும். இது அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்களை நம்பிக்கை கொள்வதை விட்டும் தடுக்கின்றது.
[2:87] மோஸஸிற்கு நாம் வேதத்தை வழங்கினோம், மேலும் அவரைத் தொடர்ந்து மற்றத் தூதர் களை நாம் அனுப்பினோம், மேலும் மேரியின் மகனாகிய இயேசுவிற்கு ஆழ்ந்த அற்புதங்களை வழங்கினோம், மேலும் பரிசுத்த ஆவியைக் கொண்டு அவருக்கு ஆதரவளித் தோம். ஒவ்வொரு முறையும் நீங்கள் விரும்பாத எதையேனும் தூதர்கள் கொண்டு வரும் போது நீங்கள் ஆணவம் கொண்டவர்களாக ஆக உங்கள் அகந்தை காரணமானது என்பது உண்மை இல்லையா? அவர்களில் சிலரை நீங்கள் ஏற்க மறுத்தீர்கள், மேலும் அவர்களில் சிலரை நீங்கள் கொன்று விட்டீர்கள்.
[2:89] அவர்களிடம் உள்ளதை ஒப்புக்கொள் வதாகவும் மேலும் அதனை உறுதிப்படுத்து வதாகவும் இது இருந்த போதிலும், மேலும் நம்ப மறுப்போருடன் உரையாடும்போது இதன் வருகையை அவர்கள் முன்னறிவித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுடைய முன்னறிவிப்பு நடந்தேறி கடவுள்-இடம் இருந்து இந்த வேதம் அவர்களிடம் வந்த போது அவர்கள் இதனை நம்ப மறுத்துவிட்டனர். கடவுள்-ன் தண்டித்தலானது இவ்விதமாக நம்ப மறுப்போரை வேதனைக்கு உள்ளாக்கு கின்றது.