குர்ஆன் 2:89 — பசுங்கன்று
அவர்களிடம் உள்ளதை ஒப்புக்கொள் வதாகவும் மேலும் அதனை உறுதிப்படுத்து வதாகவும் இது இருந்த போதிலும், மேலும் நம்ப மறுப்போருடன் உரையாடும்போது இதன் வருகையை அவர்கள் முன்னறிவித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுடைய முன்னறிவிப்பு நடந்தேறி கடவுள்-இடம் இருந்து இந்த வேதம் அவர்களிடம் வந்த போது அவர்கள் இதனை நம்ப மறுத்துவிட்டனர். கடவுள்-ன் தண்டித்தலானது இவ்விதமாக நம்ப மறுப்போரை வேதனைக்கு உள்ளாக்கு கின்றது.
[2:88] சிலர், “எங்கள் மனங்கள் முடிவெடுத்து விட்டன” என்று கூறுவார்கள், அவ்வாறல்ல, இது அவர்களுடைய நம்பிக்கையின்மையின் விளை வாக கடவுள்-இடம் இருந்து வந்த சாபம் ஆகும். இது அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்களை நம்பிக்கை கொள்வதை விட்டும் தடுக்கின்றது.
[2:90] தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தவர்கள் மீது கடவுள் தன்அருட்கொடையைப் பொழிந் ததற்காக ஆத்திரம் கொண்டு கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளை ஏற்கமறுத்து - தங்கள் ஆன்மாக்களை விற்று அவர்கள் எதனைப் பெற்றுக் கொண்டார்களோ, அது உண்மையில் துக்ககரமானது. அதன் வினளவாக, அவர்கள் கோபத்தின் மேல் கோபத்திற்கு உள்ளானார்கள். நம்பமறுப்பவர்கள் இழிவுபடுத்துகின்றதொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள்.