Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:90 — பசுங்கன்று

தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தவர்கள் மீது கடவுள் தன்அருட்கொடையைப் பொழிந் ததற்காக ஆத்திரம் கொண்டு கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளை ஏற்கமறுத்து - தங்கள் ஆன்மாக்களை விற்று அவர்கள் எதனைப் பெற்றுக் கொண்டார்களோ, அது உண்மையில் துக்ககரமானது. அதன் வினளவாக, அவர்கள் கோபத்தின் மேல் கோபத்திற்கு உள்ளானார்கள். நம்பமறுப்பவர்கள் இழிவுபடுத்துகின்றதொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள்.

[2:89] அவர்களிடம் உள்ளதை ஒப்புக்கொள் வதாகவும் மேலும் அதனை உறுதிப்படுத்து வதாகவும் இது இருந்த போதிலும், மேலும் நம்ப மறுப்போருடன் உரையாடும்போது இதன் வருகையை அவர்கள் முன்னறிவித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுடைய முன்னறிவிப்பு நடந்தேறி கடவுள்-இடம் இருந்து இந்த வேதம் அவர்களிடம் வந்த போது அவர்கள் இதனை நம்ப மறுத்துவிட்டனர். கடவுள்-ன் தண்டித்தலானது இவ்விதமாக நம்ப மறுப்போரை வேதனைக்கு உள்ளாக்கு கின்றது.

[2:91] “கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளில் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “எங்களுக்கு இறக்கப்பட்டவற்றில் மட்டுமே நாங்கள் நம்பிக்கை கொள்வோம் என்று கூறுகின்றனர். இவ்விதமாக, அது அவர் களுடைய இரட்சகரிடமிருந்து வந்த சத்தியமாக இருந்த போதிலும், மேலும் அவர்களிடம் உள்ளதை அது உறுதிப்படுத்திய போதிலும் அதனைத் தொடர்ந்த வெளிப்பாடுகளில் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்திருந் தால் ஏன் கடவுள்-ன் வேதம் வழங்கப்பட்ட வர்களை கொலை செய்தீர்கள்?” என்று கூறுவீராக.