Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:91 — பசுங்கன்று

وَإِذا قيلَ لَهُم ءامِنوا بِما أَنزَلَ اللَّهُ قالوا نُؤمِنُ بِما أُنزِلَ عَلَينا وَيَكفُرونَ بِما وَراءَهُ وَهُوَ الحَقُّ مُصَدِّقًا لِما مَعَهُم ۗ قُل فَلِمَ تَقتُلونَ أَنبِياءَ اللَّهِ مِن قَبلُ إِن كُنتُم مُؤمِنينَ

“கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளில் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “எங்களுக்கு இறக்கப்பட்டவற்றில் மட்டுமே நாங்கள் நம்பிக்கை கொள்வோம் என்று கூறுகின்றனர். இவ்விதமாக, அது அவர் களுடைய இரட்சகரிடமிருந்து வந்த சத்தியமாக இருந்த போதிலும், மேலும் அவர்களிடம் உள்ளதை அது உறுதிப்படுத்திய போதிலும் அதனைத் தொடர்ந்த வெளிப்பாடுகளில் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்திருந் தால் ஏன் கடவுள்-ன் வேதம் வழங்கப்பட்ட வர்களை கொலை செய்தீர்கள்?” என்று கூறுவீராக.

[2:90] தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தவர்கள் மீது கடவுள் தன்அருட்கொடையைப் பொழிந் ததற்காக ஆத்திரம் கொண்டு கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளை ஏற்கமறுத்து - தங்கள் ஆன்மாக்களை விற்று அவர்கள் எதனைப் பெற்றுக் கொண்டார்களோ, அது உண்மையில் துக்ககரமானது. அதன் வினளவாக, அவர்கள் கோபத்தின் மேல் கோபத்திற்கு உள்ளானார்கள். நம்பமறுப்பவர்கள் இழிவுபடுத்துகின்றதொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள்.

[2:92] ஆழ்ந்த அற்புதங்களுடன் மோஸஸ் உங்களிடம் வந்தார், இருப்பினும் அவர் இல்லாத போது நீங்கள் கன்றுக்குட்டியை வழிபட்டீர்கள், மேலும் தீயவர்களாக மாறிவிட்டீர்கள்.