குர்ஆன் 2:92 — பசுங்கன்று
ஆழ்ந்த அற்புதங்களுடன் மோஸஸ் உங்களிடம் வந்தார், இருப்பினும் அவர் இல்லாத போது நீங்கள் கன்றுக்குட்டியை வழிபட்டீர்கள், மேலும் தீயவர்களாக மாறிவிட்டீர்கள்.
[2:91] “கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளில் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “எங்களுக்கு இறக்கப்பட்டவற்றில் மட்டுமே நாங்கள் நம்பிக்கை கொள்வோம் என்று கூறுகின்றனர். இவ்விதமாக, அது அவர் களுடைய இரட்சகரிடமிருந்து வந்த சத்தியமாக இருந்த போதிலும், மேலும் அவர்களிடம் உள்ளதை அது உறுதிப்படுத்திய போதிலும் அதனைத் தொடர்ந்த வெளிப்பாடுகளில் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்திருந் தால் ஏன் கடவுள்-ன் வேதம் வழங்கப்பட்ட வர்களை கொலை செய்தீர்கள்?” என்று கூறுவீராக.
[2:93] “நாம் உங்களுக்குக் கொடுத்திருக்கின்ற கட்டளைகளை நீங்கள் திடமாக ஆதரிக்க வேண்டும், மேலும் கவனத்துடன் செவியேற்க வேண்டும்,” என்று சினாய் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தியவண்ணம் உங்களிடம் ஓர் உடன் படிக்கை செய்தோம். அவர்கள், “நாங்கள் செவியேற்கின்றோம், ஆனால் நாங்கள் கீழ்படிய மாட்டோம்” என்று கூறினார்கள். அவர் களுடைய நம்பிக்கையின்மையின் காரணமாக, கன்றுக்குட்டியின் மேல் உள்ள பக்தியால் அவர்களுடைய நெஞ்சங்கள் நிறைந்திருந்தது. “உங்களுக்கு ஏதேனும் நம்பிக்கை இருக்கு மானால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதனைக் கட்டளையிடுகின்றதோ அது உண்மையில் துக்ககரமானது”என்று கூறுவீராக.