Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:94 — பசுங்கன்று

“மற்ற எல்லா மக்களையும் தவிர்த்து, மறுவுலகின் வீடானது கடவுள்-இடம் உங்களுக்கென்று தயார் செய்து வைக்கப் பட்டிருக்குமாயின், நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், நீங்கள் மரணத்தை மிகவும் விரும்ப வேண்டும், என்று கூறுவீராக.

[2:93] “நாம் உங்களுக்குக் கொடுத்திருக்கின்ற கட்டளைகளை நீங்கள் திடமாக ஆதரிக்க வேண்டும், மேலும் கவனத்துடன் செவியேற்க வேண்டும்,” என்று சினாய் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தியவண்ணம் உங்களிடம் ஓர் உடன் படிக்கை செய்தோம். அவர்கள், “நாங்கள் செவியேற்கின்றோம், ஆனால் நாங்கள் கீழ்படிய மாட்டோம்” என்று கூறினார்கள். அவர் களுடைய நம்பிக்கையின்மையின் காரணமாக, கன்றுக்குட்டியின் மேல் உள்ள பக்தியால் அவர்களுடைய நெஞ்சங்கள் நிறைந்திருந்தது. “உங்களுக்கு ஏதேனும் நம்பிக்கை இருக்கு மானால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதனைக் கட்டளையிடுகின்றதோ அது உண்மையில் துக்ககரமானது”என்று கூறுவீராக.

[2:95] அவர்களுடைய கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக, அவர்கள் ஒருபோதும் அதனை விரும்ப மாட்டார்கள் கடவுள் தீயவர்களை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.