குர்ஆன் 2:95 — பசுங்கன்று
அவர்களுடைய கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக, அவர்கள் ஒருபோதும் அதனை விரும்ப மாட்டார்கள் கடவுள் தீயவர்களை முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[2:94] “மற்ற எல்லா மக்களையும் தவிர்த்து, மறுவுலகின் வீடானது கடவுள்-இடம் உங்களுக்கென்று தயார் செய்து வைக்கப் பட்டிருக்குமாயின், நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், நீங்கள் மரணத்தை மிகவும் விரும்ப வேண்டும், என்று கூறுவீராக.
[2:96] உண்மையில், வாழ்வின் மீது பேராசை கொண்டவர்களாக அவர்களை நீர் காண்பீர், இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களை விடவும் மிக அதிகமாக, அவர்களில் ஒவ்வொருவனும் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமென்று விரும்புகின் றான். ஆனால் அவன் எத்தனை நீண்ட காலம் வாழ்ந்தாலும் அவனுடைய தண்டனை எதையும் அது குறைத்துவிடாது. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.