குர்ஆன் 2:97 — பசுங்கன்று
“கப்ரியேலை எதிர்க்கின்ற எவர்ஒருவரும், அவர்தான் கடவுள்-ன் நாட்டத்திற்கிணங்க, முந்திய வேதங்களை உறுதிப்படுத்துகின்ற, மேலும் நம்பிக்கை கொண்டோருக்கு வழிகாட்டல் மற்றும் நற்செய்தியை வழங்குகின்ற இதனை (குர்ஆன்) கொண்டு வந்து உமது இதயத்தில் இறக்கி வைத்திருக்கின்றார், என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுவீராக.
[2:96] உண்மையில், வாழ்வின் மீது பேராசை கொண்டவர்களாக அவர்களை நீர் காண்பீர், இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களை விடவும் மிக அதிகமாக, அவர்களில் ஒவ்வொருவனும் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமென்று விரும்புகின் றான். ஆனால் அவன் எத்தனை நீண்ட காலம் வாழ்ந்தாலும் அவனுடைய தண்டனை எதையும் அது குறைத்துவிடாது. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.
[2:98] கடவுள்-ஐயும், அவருடைய வானவர்களையும், மேலும் அவருடைய தூதர்களையும், கப்ரியேலையும், மைக்கேலையும் எதிர்க்கின்ற எவர் ஒருவரும், நம்பமறுப்பவர்களை கடவுள் எதிர்க்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.