குர்ஆன் 20:104 — தா.ஹா.
அவர்களுடைய பேச்சுக்களை நாம் முற்றிலும் அறிந்திருக்கின்றோம். அவர்களில் மிகச் சரியானவர், “நீங்கள் தங்கியிருந்தது ஒரு நாளைக் காட்டிலும் அதிகமில்லை” என்று கூறுவார்.
[20:103] தங்களுக்கிடையில் கிசுகிசுத்தவர்களாக அவர்கள், “(முந்திய வாழ்வில்) நீங்கள் தங்கியிருந்தது பத்து நாட்களை விட அதிகமில்லை!” என்று கூறுவார்கள்.
[20:105] மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். கூறும், “என் இரட்சகர் அவற்றைத் துடைத்தெடுத்து விடுவார்”.