குர்ஆன் 20:109 — தா.ஹா.
அந்நாளில், மிக்க அருளாளரால் அனுமதிக்கப் பட்டவர்களுக்கும், மேலும் எவர்களுடைய கூற்றுக்கள் அவருடைய நாட்டத்திற்கு ஒத்திருக்கின்றதோ அவர்களுக்கும் தவிர, பரிந்துரை பயனற்றதாகவே இருக்கும்.
[20:108] அந்நாளில் , சிறிதுகூட இலக்கு மாறாமல் ஒவ்வொருவரும் அழைப்பவரைப் பின்தொடர்வார்கள். மிக்க அருளாளரின் முன் அனைத்துச் சப்தங்களும் ஒடுங்கி விடும்; முணுமுணுப்புக்களைத் தவிர வேறெதையும் நீர் கேட்க மாட்டீர்.
[20:110] அவர்களுடைய கடந்த காலத்தையும் மேலும் அவர்களுடைய எதிர் காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார், அதே சமயம் அவரது அறிவை எவரும் சூழ்ந்து கொள்ள இயலாது.