குர்ஆன் 20:113 — தா.ஹா.
அவர்கள் காப்பாற்றப்படலாம், அல்லது அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள இது காரணம் ஆகலாம் என்பதற்காக, இதை நாம் இவ்விதமாக ஓர் அரபி மொழியிலான குர்ஆனாக வெளிப்படுத்தினோம் மேலும் இதில் எல்லாவிதமான முன்னறிவிப்புகளையும் நாம் எடுத்துரைத்துள்ளோம்.
[20:112] நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான செயல்கள் செய்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அநீதியையோ அல்லது துரதிர்ஷ்டத்தையோ குறித்து அச்சம் கொள்ள மாட்டார்கள்.
[20:114] கடவுள் மிகவும் உயர்வானவர், உண்மையான ஒரே அரசர். குர்ஆனை உமக்கு வெளிப் படுத்தப்படுவதற்கு முன்னர் அதனைக் கூறுவதற்கு அவசரப்படாதீர், மேலும், “என் இரட்சகரே, எனது அறிவை அதிகரிப்பீராக” என்று கூறுவீராக.