குர்ஆன் 20:114 — தா.ஹா.
கடவுள் மிகவும் உயர்வானவர், உண்மையான ஒரே அரசர். குர்ஆனை உமக்கு வெளிப் படுத்தப்படுவதற்கு முன்னர் அதனைக் கூறுவதற்கு அவசரப்படாதீர், மேலும், “என் இரட்சகரே, எனது அறிவை அதிகரிப்பீராக” என்று கூறுவீராக.
[20:113] அவர்கள் காப்பாற்றப்படலாம், அல்லது அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள இது காரணம் ஆகலாம் என்பதற்காக, இதை நாம் இவ்விதமாக ஓர் அரபி மொழியிலான குர்ஆனாக வெளிப்படுத்தினோம் மேலும் இதில் எல்லாவிதமான முன்னறிவிப்புகளையும் நாம் எடுத்துரைத்துள்ளோம்.
[20:115] கடந்த காலத்தில் ஆதாமை நாம் சோதித்தோம், ஆனால் அவர் மறந்து விட்டார், மேலும் அவரை நாம் உறுதியற்றவராகக் கண்டோம்.