குர்ஆன் 20:129 — தா.ஹா.
உம் இரட்சகரின் முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்டம் இல்லாமலிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள்.
[20:128] முந்திய எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்பது எப் பொழுதாவது அவர்களுக்குத் தோன்று கின்றதா? தங்களுக்கு முன்னிருந்தவர் களின் வீடுகளில் இப்போது அவர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். அறிவுத்திறனுடை யோருக்கு இவை அத்தாட்சிகளாகும்.
[20:130] ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களை எதிர்கொண்டால் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் சூரிய உதயத்திற்கு முன்னரும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உம் இரட்சகரைப் புகழவும் துதிக்கவும் செய்வீராக. மேலும் நீர் மகிழ்ச்சியோடு இருக்கும் பொருட்டு, இரவுப் பொழுதிலும், மற்றும் அதே போல் பகலின் இருமுனைகளிலும் அவரைத் துதிப்பீராக.