Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:130 — தா.ஹா.

ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களை எதிர்கொண்டால் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் சூரிய உதயத்திற்கு முன்னரும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உம் இரட்சகரைப் புகழவும் துதிக்கவும் செய்வீராக. மேலும் நீர் மகிழ்ச்சியோடு இருக்கும் பொருட்டு, இரவுப் பொழுதிலும், மற்றும் அதே போல் பகலின் இருமுனைகளிலும் அவரைத் துதிப்பீராக.

[20:129] உம் இரட்சகரின் முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்டம் இல்லாமலிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள்.

[20:131] மேலும் மற்றெந்த மக்களுக்கும் நாம் அளித்தவற்றின் மீது நீர் பேராசை கொள்ளாதீர். அவை இந்த வாழ்வின் தற்காலிக அலங் காரங்களேயாகும், அவற்றின் மூலம் நாம் அவர்களைச் சோதனையில் ஆழ்த்து கின்றோம். உம் இரட்சகர் உமக்கு வழங்கி யிருப்பவை மிகவும் மேலானதும், மேலும் நிலைத்திருப்பதுமாகும்.