குர்ஆன் 20:131 — தா.ஹா.
மேலும் மற்றெந்த மக்களுக்கும் நாம் அளித்தவற்றின் மீது நீர் பேராசை கொள்ளாதீர். அவை இந்த வாழ்வின் தற்காலிக அலங் காரங்களேயாகும், அவற்றின் மூலம் நாம் அவர்களைச் சோதனையில் ஆழ்த்து கின்றோம். உம் இரட்சகர் உமக்கு வழங்கி யிருப்பவை மிகவும் மேலானதும், மேலும் நிலைத்திருப்பதுமாகும்.
[20:130] ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களை எதிர்கொண்டால் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் சூரிய உதயத்திற்கு முன்னரும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உம் இரட்சகரைப் புகழவும் துதிக்கவும் செய்வீராக. மேலும் நீர் மகிழ்ச்சியோடு இருக்கும் பொருட்டு, இரவுப் பொழுதிலும், மற்றும் அதே போல் பகலின் இருமுனைகளிலும் அவரைத் துதிப்பீராக.
[20:132] தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிக்கவும், மேலும் அதை செய்து வருவதில் உறுதியோடு தொடர்ந்திருக்கவும் உம் குடும்பத்தாரிடம் நீர் கட்டளையிட வேண்டும். உம்மிடம் எந்த வாழ்வாதாரங்களையும் நாம் கேட்கவில்லை; நாம் தான் உமக்கு வழங்குகின்றோம். மகத்தான இறுதி வெற்றி நன்னெறியாளருக்கே உரியது.