Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:132 — தா.ஹா.

தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிக்கவும், மேலும் அதை செய்து வருவதில் உறுதியோடு தொடர்ந்திருக்கவும் உம் குடும்பத்தாரிடம் நீர் கட்டளையிட வேண்டும். உம்மிடம் எந்த வாழ்வாதாரங்களையும் நாம் கேட்கவில்லை; நாம் தான் உமக்கு வழங்குகின்றோம். மகத்தான இறுதி வெற்றி நன்னெறியாளருக்கே உரியது.

[20:131] மேலும் மற்றெந்த மக்களுக்கும் நாம் அளித்தவற்றின் மீது நீர் பேராசை கொள்ளாதீர். அவை இந்த வாழ்வின் தற்காலிக அலங் காரங்களேயாகும், அவற்றின் மூலம் நாம் அவர்களைச் சோதனையில் ஆழ்த்து கின்றோம். உம் இரட்சகர் உமக்கு வழங்கி யிருப்பவை மிகவும் மேலானதும், மேலும் நிலைத்திருப்பதுமாகும்.

[20:133] அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அவர் மட்டும் ஓர் அற்புதத்தைக் காட்ட முடிந்தால்!” என்று கூறினார்கள். முந்திய தூதுச் செய்திகளுடன் போதுமான அற்புதங் களை அவர்கள் பெறவில்லையா?