குர்ஆன் 20:135 — தா.ஹா.
“நாம் அனைவரும் காத்துக் கொண்டு தான் இருக்கின்றோம், எனவே காத்திருங்கள்; சரியான பாதையில் இருப்பவர்கள் யார் என்றும், மேலும் உண்மையில் வழிகாட்டப் பட்டவர்கள் யார் என்றும் நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள்” என்று கூறுவீராக.
[20:134] இதற்கு முன்னர் அவர்களை நாம் அழித் திருந்தால், அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு ஒரு தூதரை நீர் அனுப்பி யிருந்தால், உமது வெளிப்பாடுகளை நாங்கள் பின்பற்றியிருப்போம், மேலும் இந்த அவமானத் தையும் மற்றும் இழிவையும் தவிர்த்திருப் போம்” என்று கூறியிருப்பார்கள்.