குர்ஆன் 20:39 — தா.ஹா.
“இவ்வாறு கூறியவாறு: ‘பெட்டிக்குள் அவரை வைத்து, பின்னர் அவரை ஆற்றினுள் வீசி விடுவீராக. என்னுடைய விரோதி மற்றும் அவருடைய விரோதியால் எடுத்துக் கொள்ளப்படுவதற்காக, ஆறு அவரை கரை மீது வீசிவிடும்.’ என்னிடமிருந்து அன்பைக் கொண்டு உம்மீது நான் பொழிந்தேன், மேலும் எனது கவனம் மிக்க கண்ணின் முன்னர் உம்மை நான் ஆக்கிக் கொண்டேன்.
[20:38] “நாம் வெளிப்படுத்த வேண்டியதை உமது தாயாருக்கு நாம் வெளிப்படுத்தியபோது.
[20:40] “உம் சகோதரி நடந்து அவர்களிடம் சென்று, ‘இவர் மீது கவனம் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு செவிலித்தாய் பற்றி என்னால் உங்களுக்குக் கூறஇயலும்’ என்று கூறினார். இவ்வி தமாக உம் தாயாரிடம், அவர் மகிழ்ச்சி அடைவ தற்காகவும் மேலும் கவலைப்படுவதை நிறுத் திக் கொள்வதற்காகவும் நாம் உம்மை திரும்பச் சேர்த்தோம். மேலும் ஒரு ஆன்மாவை நீர் கொன்று விட்ட போது, வருத்தம் தரும் அதன் பின்விளைவுகளிலிருந்து உம்மை நாம் காத்தோம்; உண்மையில் நாம் உம்மை முற்றிலும் சோதித்தோம். மித்யன் சமூகத்தாருடன் வருடக் கணக்கில் நீர் தங்கியிருந்தீர், மேலும் துல்லியமானதொரு திட்டத்திற்கேற்ப இப்போது நீர் திரும்பி வந்திருக்கின்றீர்.