குர்ஆன் 20:62 — தா.ஹா.
அவர்கள், அந்தரங்கமாக ஆலோசித்தவாறு, தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர்.
[20:61] மோஸஸ் அவர்களிடம், “உங்களுக்குக் கேடுதான். கடவுள்-உடன் சண்டையிடு வதற்காகப் பொய்களை இட்டுக்கட்டிக் கொண்டு, மேலும் இவ்விதமாக அவருடைய தண்டனைக்கு உள்ளாகின்றீர்களா?” இத்த கைய இட்டுக்கட்டுபவர்கள் நிச்சயமாகத் தோற்றுப் போவார்கள்” என்று கூறினார்.
[20:63] அவர்கள் கூறினார்கள், “இவர்கள் இருவரும் தங்களுடைய மாயாஜாலத்தால் உங்கள் நாட்டைவிட்டு உங்களை வெளியேற்றவும், மேலும் உங்களுடைய இலட்சிய வாழ்க்கை முறையை நாசமாக்கவும் விரும்புகின்ற இரு மந்திரவாதிகள் என்பதைத் தவிர அதிகமாக ஒன்றுமில்லை.