Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:71 — தா.ஹா.

அவன், என்னுடைய அனுமதியின்றி அவர்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? உங்களுக்கு மாயாஜாலத்தைக் கற்றுத் தந்த உங்களுடைய தலைவராகத்தான் அவர் இருக்க வேண்டும். நான் நிச்சயமாக உங்கள் மாறுகைகள் மாறுகால்களைத் துண்டித்திடுவேன். கிளையில்லா மரங்களின் அடிமரங்களின் மீது உங்களைச் சிலுவையிலறைவேன்.நம்மில் மோசமான தண்டனைக்கு உட்படுத்தக் கூடியவர் யார் என்பதையும், மேலும் யார் யாரைவிட நெடுங்காலம் நீடித்திருக்கப் போகின்றார் என்பதையும் நீங்கள் கண்டு கொள்வீர்கள்” என்று கூறினான்.

[20:70] “ஆரோன் மற்றும் மோஸஸின் இரட்சகர் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்”, என்று கூறியவர்களாக மந்திரவாதிகள் சிரம் பணிந்து விழுந்தனர்.

[20:72] அவர்கள் கூறினர், “எங்களுக்கு வந்திருக்கும் தெளிவான சான்றுகளைவிடவும், மேலும் எங்களைப் படைத்தவரைவிடவும் மேலாக உன்னை நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள மாட்டோம். ஆகையால், நீ அளிக்க விரும்பு கின்ற எந்த ஒரு தீர்ப்பையும் அளித்துக்கொள். கீழான இந்த வாழ்வில்தான் உன்னால் அரசாள இயலும்.