குர்ஆன் 20:70 — தா.ஹா.
“ஆரோன் மற்றும் மோஸஸின் இரட்சகர் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்”, என்று கூறியவர்களாக மந்திரவாதிகள் சிரம் பணிந்து விழுந்தனர்.
[20:69] “உமது வலக்கரத்தில் பிடித்திருப்பதை நீர் வீசும், மேலும் அது அவர்கள் உருவாக்கியவற்றை விழுங்கிவிடும். அவர்கள் உருவாக்கியவை ஒரு மந்திரவாதியின் சூழ்ச்சி என்பதை விட அதிகமாக ஒன்றுமில்லை. மந்திரவாதியின் வேலை வெற்றி பெறாது”.
[20:71] அவன், என்னுடைய அனுமதியின்றி அவர்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? உங்களுக்கு மாயாஜாலத்தைக் கற்றுத் தந்த உங்களுடைய தலைவராகத்தான் அவர் இருக்க வேண்டும். நான் நிச்சயமாக உங்கள் மாறுகைகள் மாறுகால்களைத் துண்டித்திடுவேன். கிளையில்லா மரங்களின் அடிமரங்களின் மீது உங்களைச் சிலுவையிலறைவேன்.நம்மில் மோசமான தண்டனைக்கு உட்படுத்தக் கூடியவர் யார் என்பதையும், மேலும் யார் யாரைவிட நெடுங்காலம் நீடித்திருக்கப் போகின்றார் என்பதையும் நீங்கள் கண்டு கொள்வீர்கள்” என்று கூறினான்.