குர்ஆன் 20:73 — தா.ஹா.
“எங்கள் பாவங்களையும், மேலும் நீ எங்களைச் செய்யும்படி நிர்பந்தித்த மாயாஜாலத்தையும் அவர் மன்னிக்கக்கூடும் என்பதற்காக, நாங்கள் எங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொண்டோம். கடவுள் மிகவும் மேலான வராகவும் எப்பொழுதும் நிலைத்திருக்கக் கூடியவராகவும் இருக்கின்றார்”.
[20:72] அவர்கள் கூறினர், “எங்களுக்கு வந்திருக்கும் தெளிவான சான்றுகளைவிடவும், மேலும் எங்களைப் படைத்தவரைவிடவும் மேலாக உன்னை நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள மாட்டோம். ஆகையால், நீ அளிக்க விரும்பு கின்ற எந்த ஒரு தீர்ப்பையும் அளித்துக்கொள். கீழான இந்த வாழ்வில்தான் உன்னால் அரசாள இயலும்.
[20:74] குற்றவாளியாகத் தன் இரட்சகரிடம் வரும் எவனொருவனும் நரகத்திற்கு உள்ளாவான், அங்கே அவன் ஒரு போதும் மரணிக்க மாட்டான், அன்றி உயிருடனும் இருக்க மாட்டான்.