Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:74 — தா.ஹா.

குற்றவாளியாகத் தன் இரட்சகரிடம் வரும் எவனொருவனும் நரகத்திற்கு உள்ளாவான், அங்கே அவன் ஒரு போதும் மரணிக்க மாட்டான், அன்றி உயிருடனும் இருக்க மாட்டான்.

[20:73] “எங்கள் பாவங்களையும், மேலும் நீ எங்களைச் செய்யும்படி நிர்பந்தித்த மாயாஜாலத்தையும் அவர் மன்னிக்கக்கூடும் என்பதற்காக, நாங்கள் எங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொண்டோம். கடவுள் மிகவும் மேலான வராகவும் எப்பொழுதும் நிலைத்திருக்கக் கூடியவராகவும் இருக்கின்றார்”.

[20:75] நன்னெறியானதொரு வாழ்க்கை நடத்திய நம்பிக்கையாளர்களாக அவரிடம் வருவோரைப் பொறுத்தவரை, அவர்கள் உயர்ந்த அந்தஸ்த்துக்களை அடைவார்கள்.