Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:81 — தா.ஹா.

நாம் உங்களுக்கு வழங்கிய நல்ல பொருட்களில் இருந்து உண்ணுங்கள், மேலும் என் கடும் கோபத்திற்கு நீங்கள் உள்ளாகாது இருக்கும் பொருட்டு, வரம்பு மீறாதிருங்கள். எவர் என் கடும்கோபத்திற்கு உள்ளாகி விட்டாரோ அவர் வீழ்ந்து விட்டார்.

[20:80] இஸ்ரவேலின் சந்ததியினரே, உங்களுடைய விரோதிகளிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றினோம், சினாய் மலையின் வலப்புறம் உங்களை வரவழைத்தோம், மேலும் நாம் உங்களுக்கு மன்னாவையும் மற்றும் காடை களையும் இறக்கி அனுப்பினோம்.

[20:82] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, மேலும் உறுதியுடன் வழிகாட்டலில் நிலைத்திருப் பவர்களை நான் நிச்சயமாக மன்னிக்கின்றேன்.