Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:86 — தா.ஹா.

கோபம் கொண்டவராகவும், மேலும் ஏமாற்றம் அடைந்தவராகவும் மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “என் சமூகத்தாரே, ஒரு நல்ல வாக்குறுதியை உங்கள் இரட்சகர் உங்களுக்கு வாக்களிக்க வில்லையா? உங்களால் காத்திருக்க முடியவில்லையா? உங்கள் இரட்சகரிடமிருந்து கடுங்கோபத்திற்கு நீங்கள் உள்ளாக விரும்புகின்றீர்களா? இதனால் தான் என்னுடன் கொண்ட உங்கள் ஒப்பந்தத்தை நீங்கள் முறித்து விட்டீர்களா?” என்று கூறியவாறு திரும்பி வந்தார்.

[20:85] அவர், “நீர் புறப்பட்ட பின்னர் உம் சமூகத் தினரை நாம் சோதனையில் ஆழ்த்தினோம், ஆனால் சாமிரியன் அவர்களை வழிதவறச் செய்து விட்டான்” என்று கூறினார்.

[20:87] அவர்கள், “நாங்கள் வேண்டுமென்றே உம்மோடு கொண்ட ஒப்பந்தத்தை முறிக்க வில்லை. ஆனால் நாங்கள் ஆபரணங்களைக் கொண்டு சுமை சுமத்தப்பட்டோம், மேலும் எங்களுடைய சுமைகளை இறக்கி வைக்கத் தீர்மானித்தோம். இதனைத்தான் சாமிரியன் யோசனையாக முன்வைத்தான்” என்று கூறினார்கள்.